தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு ஊழியர்களை ஒருமையில் பேசும் நிதித்துறை சிறப்பு செயலாளரை கண்டித்து சென்னை தலைமை செயலகத்தில் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தலைமை செயலக நிதித்துறை சிறப்பு செயலாளர் அருண் சுந்தர் தயாள் என்பவர் ஊழியர்களை ஒருமையில் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறப்பு செயலாளரின் இந்த போக்கை கண்டித்து, நிதித்துறை செயலாளரிடம் புகார் கொடுக்க 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததால் தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

முகம் சுளிக்கும் வகையில் ஊழியர்களை சிறப்பு செயலாளர் ஒருமையில் பேசுவதாகவும்,  இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நிதித்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Night
Day