தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து விட்டதாகவும், இதற்கு முக்கிய காரணம், போதைப்பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் தீவிரமாக பரவி உள்ளதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் நேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்ற பின்னர், அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். கருணையே வடிவான, கர்த்தராகிய இயேசுபிரான் அவதரித்த திருநாளையொட்டி கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார். ஏழை, எளிய கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் சென்றுவர புரட்சித்தலைவி அம்மா மேற்கொண்ட நடவடிக்கை குறித்து புரட்சித்தாய் சின்னம்மா நினைவு கூர்ந்தார்.

திமுக அரசு அறிவிக்கும் பல திட்டங்கள், ஏற்கெனவே அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் என்றும், திமுக அரசு, பெயர் மாற்றம் செய்து புதிய திட்டம் போல் அறிவிப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் கலாச்சாரம் தீவிரமாக பரவி இருப்பதுதான் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு பெருமளவு கடனில் மூழ்கியிருப்பதாகவும், தற்போதைய மொத்தக்கடன் 8 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், இது விரைவில் 10 லட்சம் கோடி ரூபாயை எட்டிவிடும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டார்.

திமுக அரசுக்கு தமிழக மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலைகள் கிடையாது, கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். கேரளாவிலிருந்து கழிவுப் பொருட்கள் தமிழக எல்லைக்குள் கொண்டு வந்து கொட்டப்படுவது நீண்ட நாட்களாக நிலவும் பிரச்னை என்றும், திமுக அரசு இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பினார்.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நற்பெயரையும், புகழையும் யாராலும் மறைக்க முடியாது என்றும், மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி நிச்சயம் மலரும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிப்பட தெரிவித்தார்.


Night
Day