திமுகவினரின் கார் மோதி ஒருவர் பலி - நியாயம் கேட்ட மக்கள் மீது தடியடி, கைது - போலீசார் அராஜகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் திமுகவினரின் கார் மோதி உயிரிழந்த நபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையில் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு சென்ற கார் ஒன்று, சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. கார் மோதி 200 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சீனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள், திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்து ஏற்படுத்திய திமுகவினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். அவர்கள் மீது தடியடி நடத்தியும், வலுக்கட்டாயமாக கைது செய்தும் போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Night
Day