தமிழகத்தை போதையில் தள்ளும் ஆட்சியாக திராவிட மாடல் மாறியுள்ளது - வானதி சீனிவாசன்

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர், செய்தியாளர் சந்திப்பில்  பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசியதாவது.... 

“டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பதுதான் இதுவரை அரசாங்கத்தின் பதிலாக இருந்தது. திராவிட மாடல் ஆட்சி என்பது  தமிழகத்தை போதையில் தள்ளும் மாடலாக இருக்கிறது ஒருபுறம் கஞ்சா, போதைப்பொருட்கள், சின்ன சின்ன சிறுவர்கள் இன்று போதைக்கு அடிமையாக இருக்கக்கூடிய சூழல், மறுபுறம் தமிழகத்தில் அதிகமாக விதவைகளை உருவாக்குகின்ற மாடலாக இந்த அரசு உள்ளது. 

பாரதிய ஜனதா கட்சி சார்பாக கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.  இந்த சம்பவம் கொலை செய்வதற்கு ஒப்பாக இருக்கிறது.அரசாங்கத்தின் இந்த இயலாமை, அலட்சியம் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்” என  பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அரசுக்கு கண்டனம் தெரிவித்தார் . 

Night
Day