தமிழகத்தில் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டுமென தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்த நிலையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை கொரோனா தொற்றால் 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணி வேண்டும் என்றும், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி, உள்ளிட்டவை இருந்தால் மகப்பேறு காலத்துக்கு முன்பாகவே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்குமாறும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Night
Day