எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சி தலைவர்கள் மும்மரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து நடிகை நமிதா குன்னூரில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஆ ராசாவின் பெயரை கூட தான் சொல்ல விரும்பவில்லை என்றும், அவர் கரப்ஷனின் ராசா எனவும் விமர்சித்தார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அரூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னலாடை நிறுவனங்கள் அமைக்கப்படும் என கூறி வாக்கு சேகரித்தார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணியை ஆதரித்து அவரின் மூன்று மகள்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதற்காக அன்புமணியின் 3-வது மகளான சஞ்சித்ரா, குமாரசாமிபேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
கடலூர் மக்களவை தொகுதியில், போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு, ஆதரமாக திமுக அமைச்சர் சி.வி கணேசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மணலூர் அருகே வேட்பாளருக்கு சால்வை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை பெண்கள் சரிமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.