டாஸ்மாக்கை அரசு நடத்த வேண்டியது ஏன்.... - நீதிபதி அதிருப்தி

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுக்கடைகளை மூட வேண்டும் என அனைவரும் கூறினாலும் தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. 

மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை அமைக்க தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, 
ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை தமிழக அரசு அமைப்பதாக குற்றம் சாட்டினர். நம் வீட்டு பிள்ளைக்கு இதுபோல செய்வோமா? என கேள்வி எழுப்பிய நீதிதிகள், தமிழக அரசின் கொள்கைகள் முரணாக உள்ளதாகவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு முறைப்படுத்திய அரசு, டாஸ்மாக் கடையில் வேறு நிலைப்பாடு கொண்டுள்ளதாகவும் காட்டமாக தெரிவித்தனர். 

மேலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு இடத்தில் இருந்து மாற்றொரு இடத்திற்கு டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு ஏன் டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்த வேண்டும் என்றும் வினா எழுப்பினர். இதனையடுத்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Night
Day