ஜெயக்குமார் வீட்டில் மற்றொருவரின் கைரேகை - புதிய திருப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

காணாமல் போனதாக கூறப்படும் மே 2ஆம் தேதி, ஜெயக்குமார் தனது மனைவியிடம் நெல்லைக்கு செல்வதாகவும், தனது மேலாளரிடம் மதுரைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் இருவருரிடமும் வெவ்வேறு இடங்களுக்கு செல்வதாக கூறியது ஏன் என்ற கேள்வி எழும்பியுள்ளது.   

ஜெயக்குமாரின் மரணம் குறித்து அவரது மனைவி ஜெயந்தி மற்றும் மகன்கள் கருத்தையா ஜெப்ரின், மார்ட்டின் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் வீட்டில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அதனை அணைத்து வைத்தது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இறப்பதற்கு முன்பாக வீட்டிலிருந்து ஜெயக்குமார் எடுத்துச்சென்ற கார், மீண்டும் வீட்டிற்கு ஓட்டிவந்தது யார்? எனவும், ஜெயக்குமார் ஓட்டிசென்ற வாகனத்தில் போலீசார் ஏன் கைரேகையை பதிவு செய்யவில்லை எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.  
 
கையும், காலும் கட்டப்பட்ட நிலையில் ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்டதால் கூலிப்படையினரை கொண்டு இந்த சம்பவம் நடத்தப்பட்டதா? எனவும், பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல் ஜெயக்குமாரின் உடல் தானா எனவும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் ஜெயக்குமார் கொடூரமாக உயிரிழந்து 4 நாட்களை கடந்தும், வழக்கில் இன்னும் ஒரு தடயம் கூட கிடைக்கவில்லையா? எனவும் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. 

ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் உள்ள ஆனந்தராஜ் என்பவர் மும்பைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அது உண்மையா? எனவும் கடிதத்தில் உள்ள மற்றொரு நபர் எங்கே? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து எழுந்துவருகிறது. 

Night
Day