சேலம்: வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்யாத திமுக அரசை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நரசிங்கபுரம் நகராட்சியின் 13வது வார்டான கருமாரியம்மன் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் முறையான சாலை, குடிநீர் வசதியில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்த அப்பகுதி மக்கள், விரைவில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என எச்சரித்தனர். 

Night
Day