சேலம்: வருடாந்திர குத்தகை ஏலத்தில் திமுகவினரின் சிண்டிகேட் முயற்சி தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியின் வருடாந்திர குத்தகை ஏலம் திமுகவினர் அட்டகாசத்தால் ஒத்திவைக்கப்பட்டது. ஆத்தூர் பேருந்து நிலைய கழிவறை உட்பட 13 வருவாய் இடங்களுக்கான வருடாந்திர குத்தகை ஏலம் நகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக கவுன்சிலர்கள் சிலர் சிண்டிகேட் அமைத்துதான் ஏலம் எடுக்க வேண்டும் எனக்கூறி, முன் பணம் கட்டியவர்களை ஏலத்தில் பங்கேற்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. 2 மணி நேரமாக காத்திருந்த அதிகாரிகள் ஒப்பந்த புள்ளி மற்றும் பொதுஏலத்தை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் ஏலத்திற்கு முன்பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

varient
Night
Day