திருப்பத்தூர்: பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர். பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண், கடாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 15ம் தேதி மருத்துவர் நிவேதன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெண் அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மருத்துவர் நிவேதனை தேடி வருகின்றனர். 

Night
Day