தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலையின் நடுவில் இருக்கும் மின் கம்பம் சிதிலமடைந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு மீனவர் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பம் சிதலமடைந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகம் மற்றும் மின்சார அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று, இங்குள்ள அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள சாக்கடை மற்றும் தெருவின் நடுப்பகுதியில் நிற்கும் மின் கம்பத்தையும் அகற்றி முழுமையான சாலை வசதி ஏற்படுத்தி தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...