சேலம் : உதயநிதி பிரச்சாரத்திற்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே திமுக கூட்டத்திற்கு ஆட்களை ஏற்றி வந்த மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர்.

கெங்கவல்லியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி வந்தார். அந்த கூட்டத்திற்கு மினி சரக்கு வேனில் 30-க்கும் மேற்பட்டோரை பணம் கொடுத்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நாவலூர்-ஏரிக்கரை சாலை வளைவில் வந்தபோது மினி சரக்கு வேன் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் வேனில் வந்த அனைவரும் ஏரியில் விழுந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காமக்கா பாளையத்தைச் சேர்ந்த தயாநிதி, செல்லதுரை ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Night
Day