செய்தியாளரை ஒருமையில் பேசிய டி.ஆர் பாலு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆத்திரமடைந்த திமுக பொருளாளர் டிஆர் பாலு,'பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்த டி. ஆர்பாலுவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பின்னர், கடந்த 2004ம் ஆண்டு ஊழல் செய்ததால் தான் 2009ல் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, உங்களை அந்த மாதிரி கேட்க சொன்னாரா? என செய்தியாளரை பார்த்து டிஆர் பாலு கேட்டுள்ளார். பேட்டியே கொடுத்துள்ளதாக செய்தியாளர் பதிலளிக்க, சரியான நேரத்தில் நான் பதிலளிக்கிறேன் என்றும், நீங்கள் இந்த கேள்வியை கேட்கல தானே என கூறினார். அண்ணாமலை சொன்னதை தான் கேட்கிறேன் என செய்தியாளர்கள் தெரிவித்தபோது, எந்த இடியட் சொன்னாலும், நீங்கள் கேட்கல தானே என் டிஆர் பாலு கூற, நான் கேட்கவில்லை, அண்ணாமலை கூறியதை தான் கேட்கிறேன் என செய்தியாளர் தெரிவித்தார். இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த டி.ஆர் பாலு, செய்தியாளரை பார்த்து பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார். இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Night
Day