எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து அவதூறாக பேசிய குடியாத்தம் குமரனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
புரட்சித்தலைவி அம்மாவுக்கு எல்லாமாக இருந்து கண்ணை இமை காப்பது போல புரட்சித்தாய் சின்னம்மா காத்து வந்தார். தனக்கு பிறகும் 100 ஆண்டுகளுக்கு அஇஅதிமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அயராது உழைத்துக்கொண்டிருக்கும் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து எந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாத திமுக முன்னாள் மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், அவதூறாக பேசியிருப்பது கோடிக்கணக்கான அஇஅதிமுக தொண்டர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
குடியாத்தம் குமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய குடியாத்தம் குமரனை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கழக நிர்வாகி அத்தானி பழனிசாமி தலைமையில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.