தர்கா நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் நேரு - இடத்தை அளந்து தராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி தென்னூர் பகுதியில் அமைச்சர் கே.என் நேருவால் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான இடத்தை அளந்து தராமல் அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக திமுக அரசு மீது தர்கா நிர்வாகத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தென்னூர் அண்ணாநகர் மீர் ஹசனுல்லா ஷா தர்காவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான இடத்தை அமைச்சர் கே என் நேரு அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்த சம்பவம் குறித்து ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் சில தினங்களுக்கு முன்பு செய்தி ஒளிபரப்பப்பட்டது.

ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலியாக வக்பு வாரிய அதிகாரிகள் நேற்று முன் தினம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்றும் வக்பு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்  ஆய்வு செய்தனர்.  ஆனால் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை அளந்து ஒப்படைப்பதில் அதிகாரிகள் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே கடந்த 2011 ஆம் ஆண்டு அமைச்சர் நேருவின் சகோதர் ராம ஜெயம் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. பின்னர் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் நிலம் மீட்கப்பட்டு மீண்டும் தர்காவினரிடமே ஒப்படைக்கப்பட்டது. 14 ஆண்டுகளாக நிம்மதியாக இருந்த நிலையில் தற்போது அமைச்சர் கே.என் நேரு மூலம் இந்த இடத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இஸ்லாமியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தர்காவுக்கு சொந்தமான இந்த இடத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மனமகிழ் மன்றம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிப்பரப்பானது. அதனை தொடர்ந்து வக்பு வாரிய அதிகாரிகள் , மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் அளவீடு செய்வதில் விளம்பர திமுக அரசின் சம்பந்தப்பட் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்,. எனவே, உரிய முறையில் தர்காவுக்கு சொந்தமான இடத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இஸ்லாமியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


Night
Day