சென்னை: கூவம் ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் கூவம் ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஜாஃபர்கான்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் - ஜோதி தம்பதியின் மகன் தனுஷ் 8ம் வகுப்பு படித்து வந்தான். ரம்ஜான் விடுமுறையில் நண்பர்களுடன் விளையாடியபோது, சிறுவர்கள் அடையாறு கூவம் ஆற்றில் இறங்கியுள்ளனர். அப்போது தனுஷ் நீச்சல் தெரியாமல் ஆற்றில் மூழ்கிய நிலையில், அச்சத்தில் மற்ற சிறுவர்கள் வீட்டிற்கு ஓடியுள்ளனர். தனுஷ் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், அவரது நண்பர்களிடம் கேட்டபோது நிகழ்ந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டனர். 

varient
Night
Day