சென்னை : பார்வை மாற்றுத்திறனாளிகள் 15-வது நாளாக போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள், இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத விளம்பர திமுக அரசால், சென்னையே போராட்டக்களமாக மாறியுள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பில் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் பார்வை மாற்றுத்திறனாளி வழங்க வேண்டும் என்றும், TNPS தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் பார்வை மாற்றுதிறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை காட்டுப்பாக்கத்தில் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் 15-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று மாற்றுத்திறனாளிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Night
Day