சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் புரட்சித்தாய் சின்னம்மா வாக்களிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், எங்களுள் இருப்பவர்கள் திருந்துவதற்கு நல்ல வாய்ப்பு அமையும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாக்களித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புரட்சித்தாய் சின்னம்மா, ஒவ்வொருவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றவேண்டும் என்றும், அதன்படி, தான், வாக்களிக்க வந்ததாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, தேர்தல் நடைபெற்று முடியும் வரை எதுவும் சொல்ல முடியாது என புரட்சித்தாய் சின்னம்மா பதிலளித்தார். 

தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல், வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக அமையுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த புரட்சித்தாய் சின்னம்மா, தங்களைப் பொறுத்தவரை 2026 சட்டமன்றத் தேர்தல் நிச்சயமாக, நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் என தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், வரும் ஜுன் மாதம் 4ம் தேதி வெளியான பின்னர், எங்களுள் இருப்பவர்கள் திருந்துவதற்கு நல்ல வாய்ப்பு அமையும் என்றும், அவர்கள் போட்ட தப்புக்கணக்கு முடிவுக்கு வரும் என்று, மற்றொரு கேள்விக்கு பதிலளித்த புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்தார். Night
Day