சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடியவிடிய கொட்டித் தீர்த்தது கனமழை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், அதன்படி, சென்னையின் மத்திய மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதில், சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 20 சென்டி மீட்டர் அளவிற்கு அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதேபோன்று, மடிப்பாக்கத்தில் 18 சென்டிமீட்டரும், மேடவாக்கம், பள்ளிக்கரணை, அடையார் பகுதிகளில் 17 சென்டிமீட்டர் அளவுக்கு மழை அளவு பதிவானது. 

இதேபோன்று சென்னை அடுத்த தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக omr சாலைகள், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் உள்ள சாலைகள் மழை நீரில் மூழ்கியது. 


Night
Day