எழுத்தின் அளவு: அ+ அ- அ
2025ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சிறப்பான சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் கைகளால் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2025ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு 45 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி என்ற தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி மற்றும் திருப்பூரில் உள்ள பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி ஆகிய இருவருக்கும் தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியை ரேவதி கல்வியின் மீதான ஆர்வத்தின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும், தேசிய விருதுக்கு தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், யாராக இருந்தாலும் கடினமாக உழைத்தால் ஒரு நாள் நிச்சயம் வெற்றி தங்களை தேடி வரும் என்று கூறினார்.