பிரேக் பழுதானதால் ஏரிக்கரையில் தொங்கியபடி நின்ற அரசுப்பேருந்து

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் அருகே அரசு பேருந்தில் பிரேக் பழுதானதால் ஏரிக்கரை பகுதியில் தொங்கியப்படி நின்ற பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


பொன்னேரியில் இருந்து அரசு பேருந்து ரெட்டிபாளைம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியாக மீஞ்சூருக்கு சென்றுவிட்டு மீண்டும்திரும்பி கொண்டிருந்தபோது, பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது. அப்போது, ஏரிக்கரை பகுதியில் உள்ள தடுப்பின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. பேருந்தில் இருந்த ஓட்டுநர்,நடத்துநர், பயணிகள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

Night
Day