திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நெல்லை காவல் துறை ஆணையாளரிடம் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் D. சுந்தர்ராஜ் நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட காணொலியை சமூக வலைதளத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்றும், குடியாத்தம் குமரன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் உறுதி அளித்துள்ளார். 

Night
Day