கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என கடந்த ஜனவரி 27ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மதுரை அமர்வு அளித்த உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டும் வழக்கை ஒத்திவைத்தனர்.

Night
Day