சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இன்று முதல் நாளை வரை 15 மின்சார ரயில்களின் சேவை ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இன்று முதல் நாளை வரை 15 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்துவருவதால், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையேயான 15 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

varient
Night
Day