சென்னை கோயம்பேட்டில் பழ வியாபாரிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, விலை அதிரடியாகக் குறைந்து வியாபாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோடை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குளிர்பானங்கள், ஜூஸ், பழங்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர். குறிப்பாக தண்ணீர் பழம் என்று அழைக்கப்படும் தர்பூசணியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தர்பூசணிக் கடைகள் துவங்கப்பட்டு சிவந்த நிறத்தில் கண்ணைக் கவரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்படி விற்கப்படும் தண்ணீர் பழங்களில் சுவை மற்றும் நிறம் அதிகரிப்பதற்காக ரசாயன ஊசி பயன்படுத்துவதாக, உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகிறது. இதன்காரணமாக தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது கிலோ 5 ரூபாய்க்கு விலை போவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இயற்கையாக உற்பத்தியாகும் தர்ப்பூசணி பழங்களையே விற்பனை செய்து வருவதாக கூறும் வியாபாரிகள், சுவை மற்றும் நிறம் அதிகரிப்பதற்காக ரசாயன ஊசி பயன்படுத்துவதாக பரப்பப்படும் தகவல்களால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Night
Day