தமிழகம்
சென்னையில் நள்ளிரவில் மழை - மக்கள் நிம்மதி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் மாநகராட்சி உர கிடங்கில் வாயு தாக்கியதில் மயக்கமடைந்த தூய்மை பணியாளருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ். எம் நகர் பகுதியில் உள்ள அந்த கிடங்கில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். எந்தவித பாதுகாப்பு உபரணங்கள் இன்றி கழிவுகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தபடாமல் இருந்த கழிவுகளிலிருந்து வெளியேறிய வாயு தாக்கி ரவி என்பவர் மயக்கம் அடைந்துள்ளார். சக பணியாளர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்த சிறிது நேரத்தில், பவுல் என்பவரும் மயக்கமடைந்து உர தொட்டிக்குள் விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக ஆவடி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட முதலுதவிக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...