சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இன்டர்நேஷனல் டிரேட் லிங்க்ஸ் நிறுவனம் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ரானுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் உள்ள இன்டர்நேஷனல் டிரேட் லிங்க்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரேநேரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day