சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே ரயில் சேவை ரத்து : தெற்கு ரயில்வே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பெங்களூரு - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பராமரிப்பு பணி மற்றும் பொறியாளார் வேலை நடைபெறவுள்ளதால் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகவும், 
பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day