சென்னையில் பலத்த தரைக்காற்று - வானில் வட்டமிடும் விமானம்

எழுத்தின் அளவு: அ+ அ-

புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையிலிருந்து விஜயவாடா, துபாய், திருச்சி, புவனேஸ்வர், மதுரை, கோவை, சிங்கப்பூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை, அந்தமான் உள்ளிட்ட 12 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், சிறிது நேரம் வானில் வட்டமடித்த பின்னரே தரையிறக்கப்படுகின்றன. 

Night
Day