சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 2 நாட்களாக குறைந்து வருவதால்  நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி ஒரு கிராம் 106  ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day