சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து ரூ.54040-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் 54 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொடுவதும், திடீரென விலை குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று ஆபரத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, 54 ஆயிரத்து 040 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 88 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 88 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day