செங்கல்பட்டு: அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து தரவில்லை என புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 59 வது வார்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு திமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரி சங்கர் கவுன்சிலராக உள்ளார். இங்கு குடிநீர் பற்றாக்குறை, மின் விளக்குகள் பழுது, உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள சிறுவர் பூங்காக்குள் மர்ம நபர்கள் கஞ்சா மற்றும் மதுபானங்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

varient
Night
Day