சிவகங்கையில் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பயிற்சி மருத்துவர்கள் மூன்றாவது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள மருத்துவமனை வளாகத்தில், சிசிடிவி கேமரா, புதிய மின் விளக்கு, பாதுகாவலர்கள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பயிற்சி மருத்துவர்கள் மூன்றாவது நாளாக டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி முதல்வர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பயிற்சி மருத்துவர்கள் கலைந்து சென்றனர்.

varient
Night
Day