சிறுமி துன்புறுத்தல் - திமுகவினர் மீது ஏன் நடவடிக்கை இல்லை : அண்ணாமலை கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறுமியை துன்புறுத்தியதாக திமுக எம்.எல்.ஏ. குடும்பத்தினரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக இளைஞர் அணி மாநாடு குடும்பத்திற்காக அவர்கள் குடும்பத்தினர் நடத்திய மாநாடு என்றும், திமுக குடும்பத்தினரின் அராஜகம் மற்றும் அடாவடியில் இருந்து தமிழகத்தை மீட்டு எடுப்பதே பாஜவின் கொள்கை எனவும் தெரிவித்தார். மேலும் பட்டியலின சிறுமியை துன்புறுத்திய விவகாரத்தில் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகளை ஏன் இதுவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

Night
Day