சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆடு விற்பனை அமோகம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி வாரச்சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. கந்திலி பகுதியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயில்களில் திருவிழா நடக்கும் என்பதால் வாரசந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. அதன்படி, வெள்ளை ஆடுகள், செம்மறி ஆடுகள், என ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கந்திலி வார சந்தைக்கு கொண்டு வந்தனர். ஒரு ஆட்டின் விலை 6 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் 60 லட்சத்திற்கும் மேலாக ஆடு விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Night
Day