எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமை தொடர்பாக உறவினர்கள் தெரிவித்த அறிவிப்புகளுக்கு தற்போதைய உரிமையாளர் கவிதா சிங் மறுப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லையில் அல்வாவுக்கு பெயர்போன இருட்டுக்கடையை சொந்தம் கோரி 3 பேர் இடையே உரிமை போர் நடந்து வருகிறது. முதலில் கவிதா சிங்கின் மருமகன் தரப்பில் உரிமை கோரிய பிரச்னை ஓய்ந்த நிலையில், அவரது சகோதர் நயன்சிங் மற்றும் உறவினர் பிரேம் ஆனந்த் தற்போது உரிமை கோரியுள்ளனர். ஏற்கனவே நயன்சிங் உரிமை கோரியதற்கு மறுப்பு தெரிவித்த கவிதா, தற்போது பிரேம் ஆனந்த் சிங் உரிமை கோரியுள்ளதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், நெல்லை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், பிரேம் ஆனந்த் சிங் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரபோவதாக கவிதா சிங் கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் படி பிஜிலி சிங் சொத்துக்கள் அனைத்தும் மனைவி சுலோச்சனா பாய்க்கு சொந்தம் எனவும், அவர் இருட்டுக்கடையின் உரிமையை தனக்கு கொடுத்துவிட்டதாகவும் அறிவிப்பில் கவிதா சிங் கூறியுள்ளார்.