எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13வது காய்கறி கண்காட்சி துவங்கியுள்ளது. பூங்காவில் 2.50 டன் காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஜல்லிகட்டு காளை, பச்சை மிளகாயால் உருவாக்கப்பட்ட பச்சை கிளிகள், பட்டாம்பூச்சி, பாண்ட கரடி போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
கோத்தகிரியில் கோடை விழாவையொட்டி 2 நாட்கள் நடைபெறும் காய்கறி கண்காட்சிகளில் டன் கணக்கிலான காய்கறிகளால் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் பகுதியில் மயில் உருவம் முருங்கைக்காய் தோகைகளோடு இடம்பெற்றுள்ளன. பூங்காவிற்குள் பச்சை மிளகாயால் உருவாக்கப்பட்ட பச்சை கிளிகள், கோவக்காய்களை கொண்டு உருவாக்கப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, சிலம்பத்தை ஆண் பெண் இருவரும் விளையாடுவது போல் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி 1.15 டன் நாட்டு கத்தரிக்காய்களால் 8 அடி உயரம் கொண்ட ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையன், கேரட் மற்றும் கத்திரிக்காய்களால் உருவாக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி, நாட்டுக் கத்தரிக்காய், கோவக்காய்களான மரகத புறா, 800 கிலோ பச்சை மிளகாய்களால் ஜோடி கிளிகள் கண்காட்சிகளில் இடம்பெற்று சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளன. இது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த தோட்டக்கலை துறை சார்பில் அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் பூசணி புலி, சிங்கம், நாட்டுக் கத்தரிக்காய்களால் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டி, கத்தரிக்காய் முள்ளங்கிகளால் பாண்டா கரடிகள் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.