உதகையில் வரும் 9, 10, 11 தேதிகளில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெறும் என தென்னிந்திய கெனல் கிளப் அறிவித்துள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் உதகைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு கண்காட்சிகளுடன் கோடை விழா நடத்தப்படும். அதன் ஒரு பகுதியாக தென்னிந்திய கெனல் கிளப் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடத்தப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான நாய்கள் கண்காட்சி உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் எனவும், அப்போது அனைத்து வகை நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெறும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தென்னிந்திய கெனல் கிளப் தலைவர் ரஜினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.  

Night
Day