கோவை: மின்கசிவு காரணமாக டைல்ஸ் கடையில் தீவிபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. பூ மார்க்கெட் பகுதியில் ராஜ்குரு என்ற டைல்ஸ் கடை, 2 மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. 

Night
Day