திருப்பத்தூர்: மலைச் சாலையில் கள்ளச்சாராய விற்பனை அமோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலைச் சாலையில் கள்ள சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கள்ளசாராயம் வாங்கி குடிக்க விரும்பும் நபர்கள் சிற்றுந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, சாராயம் அருந்திய பின் மீண்டும் அவரவர் ஊர்களில் இறக்கிவிடப்படுகின்றனர். கள்ளச்சாராயம் குடிப்பதற்காக செல்லும் குடிமகன்களால் மலைப்பகுதியில் உள்ள பெண்கள் இடையூறுகளை எதிர்கொள்ளும் சூழல் நிலவுகிறது. தமிழக-ஆந்திர எல்லைப் பகுதிக்கு இடையே நடைபெறும் இந்த கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, சோதனைச் சாவடியில் பணியில் இருக்கும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Night
Day