கோவை: ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய போலீசாரின் வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே மதுபோதையில் தரக்குறைவாக பேசிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து போலீசார் வழக்கம்போல் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநரை மடக்கி பிடித்து போக்குவரத்து போலீசார், ஆவணங்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், போலீசாரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த போலீசார் , ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். 

varient
Night
Day