கோடை விடுமுறை - ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் படகு சவாரி செய்ய 2 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றுலா பயணிகள் காத்திருந்த நிலை ஏற்பட்டது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பால், படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகுகளில் பயணம் செய்ய 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்று இயற்கை காட்சிகளை சுற்றி பார்த்தனர். கோடைகாலம் முடியும் வரை கூடுதல் படகுகளை இயக்க சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day