இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த சாரதி, தீரன்ராஜ் ஆகிய இரண்டு இளைஞர்கள் புதிய இருசக்கர வாகனத்தில் செம்பட்டி வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தீரன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக திண்டுக்கல் மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Night
Day