கொடைக்கானல்: வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் சீசனை பொறுத்து பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்கும். தற்போது, ஆண்டுக்கு ஒருமுறை மரத்தில் பூக்கக்கூடிய ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. இளம்சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

varient
Night
Day