குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேரை துரத்தி, துரத்தி கடித்த வெறிநாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா வந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேரை வெறிநாய் ஒன்று  துரத்தி கடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

குற்றாலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம். இந்நிலையில், குற்றலாத்துக்கு வந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாள் சாமி, புளியங்குடி பகுதியை சேர்ந்த மைக்கேல், கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட 6 நபர்களையும், இரண்டு சிறுவர்களையும் வெறிநாய் ஒன்று துரத்தி, துரத்தி கடித்தது. இதில் காயமடைந்த 8 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வெறிநாய் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டியுள்ளன. 

Night
Day