குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் "அண்ணா சாலை"

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மோன்தா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் மிதமான மழை நீடித்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் மழையால் மிக முக்கிய சாலையான அண்ணா சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகனங்கள் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மழை காரணமாக சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பிரதான சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதேபோல், சென்னை எல்ஐசி பகுதியில் நேற்று மாலை முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதே போல் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

Night
Day