கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கரிடம் பயணிகள் வாக்குவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஆய்வுக்கு சென்ற திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் பயணிகள் எழுப்பிய கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் அலறியடித்து ஓடியது பொதுமக்களை அதிருப்பதியடைய செய்துள்ளது.

சென்னையில் இருந்து வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணிகள் அதிக அளவு செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் குறித்து கேட்டால் அதிகாரிகள் மெத்தனமாக பதிலளிப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஆய்வுக்கு சென்றனர். அப்போது, அமைச்சர்களிடம் பயணிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காமல் அமைச்சர்கள் தப்பியோடினர்.

Night
Day