கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லையென புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து நேற்று முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் சென்னை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து பயணிகளும் கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், உணவங்களில் உணவுகளின் விலை மிக அதிகமாக உள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

varient
Night
Day