காயிதேமில்லத் அவர்களின் 130-ஆவது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தன்னலமற்ற, தூய்மையான அரசியலை முன்னெடுத்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 130-ஆவது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரபோராட்ட வீரரான காயிதேமில்லத், தமிழர்களுக்காக குரல்கொடுத்தவர் என்றும் இந்திய அரசியலமைப்பை உருவாக்கி, இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையின் உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தின் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த காயிதேமில்லத்தின் நினைவாக, கடந்த 1983ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் அவர்கள், காயிதேமில்லத்தின் வாழ்க்கை குறிப்புகளை 5ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம்பெறச் செய்தார் -

அதேபோன்று, கடந்த 2003ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா ஆட்சிகாலத்தில்தான் தமிழகஅரசு சார்பாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதேமில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில், காயிதேமில்லத்திற்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தன்னலமற்ற, தூய்மையான அரசியலை முன்னெடுத்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் பிறந்தநாளில் அவரைப் போன்று மக்களுக்காகவும், நாட்டுக்காக வாழவும், அனைவரிடமும் அன்பும், சமாதானமும் கொண்டு ஒற்றுமையுடன் வாழ உறுதி ஏற்போம் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day